ஆயுத பூஜை பண்டிகை விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
00:33

சென்னை: ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி, மாதவரம் தற்காலிக பழ மார்க்கெட்டிற்கு, ஆப்பிள், சாத்துக்குடி வரத்து அதிகரித்து உள்ளது.ஆயுத பூஜை பண்டிகை, வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.



அன்றைய தினம் விடுமுறை என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என, பல இடங்களில், இப்போதே பண்டிகை கொண்டாட்டம் களைக்கட்ட துவங்கியுள்ளது. பூஜையில், பொரி, கடலையுடன், வாழைப்பழம், சாத்துக்குடி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களும் இடம்பெறும்.



இதற்காக, மாதவரம் பஸ் நிலையத்தில் இயங்கும், தற்காலிக பழ மார்க்கெட்டிற்கு, பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது. ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, ஆப்பிள்கள் லாரிகளில் குவிய துவங்கியுள்ளன. ஆந்திரா மாநிலத்தில் இருந்து, சாத்துக்குடி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஆரஞ்சு பழங்களும், அதிகளவில் வரத்துவங்கி உள்ளன. தேனி, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, வாழைப்பழங்களும் விற்பனைக்கு குவிந்து வருகிறது. நேற்று முதலே, ஆயுதபூஜைக்கான பழங்கள் விற்பனை சூடுபிடித்தது. இதனால், வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர். பண்டிகையை ஒட்டி, காலையில் கூடுதல் நேரம் அவற்றை விற்பனை செய்வதற்கும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X