அவிநாசி:தத்தனுார் ஊராட்சியில் உள்ள பழமையான வாரச்சந்தை, மேம்படுத்தப்பட்ட சந்தையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே உள்ள தத்தனுார் ஊராட்சி, பொங்கே கவுண்டம்புதுார் வாரச்சந்தை பழமையானது. வாரம் ஒருமுறை கூடும் இச்சந்தையில் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்பது வழக்கம்.இச்சந்தையை மேம்படுத்த, அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில், 44.96 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான, பூமி பூஜை நேற்று நடத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பிரசாத்குமார், சேவூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறுகையில், ''சந்தையை சுற்றி, தடுப்புச்சுவர் அமைக்கப்படும். புதிய கடைகள் கட்டப்பட உள்ளன. இதன் மூலம் சந்தை மேம்படுத்தப்படும். இதன்மூலம், அதிகளவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர்,'' என்றார்.