உழைப்புக்கு இலக்கணம் கவுசல்யா பாட்டி; 99 வயதிலும் ஓட்டல் நடத்தி அசத்துகிறார்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 அக்
2020
11:08
பதிவு செய்த நாள்
அக் 23,2020 00:42

நல்ல விஷயங்களும், நல்ல மனிதர்களும் தோற்றதாக சரித்திரம் இல்லை என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வருகிறார், 99 வயது கவுசல்யா பாட்டி.



சென்னை, நங்கநல்லுார், 45வது தெரு முனையில், தள்ளு வண்டியில், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும் உணவகத்தில், உணவருந்த காத்திருக்கும் கூட்டத்திற்கு இடையில், ஆட்டோவில் வந்திறங்கும், கவுசல்யா பாட்டியே, இந்த கட்டுரையின் நாயகி.



மாயவரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவரின் முன்னோர்களும், சமையல் கலையில் கைநேர்த்தி மிக்கவர்களாக இருந்ததால், அந்த பக்குவம், பாட்டிக்கும் ஒட்டிக் கொண்டது என்றே சொல்லலாம். ஆட்டோவில் இருந்து, கவுசல்யா பாட்டி இறங்கும்போதே, அவர் எடுத்து வந்த இட்லி, பூரி, பொங்கல், கிச்சடி, வடை உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் நிறைந்த பாத்திரங்களும், வரிசைகட்டி இறங்குகின்றன.


சுட சுட உணவு




ஐந்து நிமிடங்களில், அனைத்தும், அந்த தள்ளு வண்டிக்கு மாறுகின்றன. சற்று நேரத்தில், சுடச்சுட சுவையுடன் தயாரான, காலை உணவை ருசி பார்க்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, கவுசல்யாவின் மேற்பார்வையில், அவரது மகள் கமலாவும், மகன் கிருஷ்ணமூர்த்தியும் பரிமாறுகின்றனர். வாடிக்கையாளர்கள் பலரை, அவர்களின் பெயர் கூறி, அன்புடன் அழைத்து, கனிவோடு, 'நல்லா சாப்பிடுப்பா!' எனச் சொல்லும் போது, சிலருக்கு தாயாக தெரிகிறார் கவுசல்யா.வயது, 99 ஆனா லும், அதிகாலை, 3:௦௦ மணிக்கு எழுந்து, மகள், மகனுடன் சேர்ந்து, மூன்று மணி நேரத்தில், உணவுகளை தயார் செய்வது முதல், வாடிக்கையாளர்களும் விரும்பும் உணவை, தெளிவான பார்வையுடன், நிதானமாக வழங்கி, 12:௦௦ மணிக்குள் கடையை மூடி, வீட்டிற்கு புறப்படுகிறார்.



வீட்டிற்கு சென்றதும், மகள், மகன் ஓய்வு எடுக்கும் நேரத்தில், அவர்களுக்கு மதிய உணவு தயார் செய்துவிட்டு, மறுநாளுக்கு உண்டான வேலைகளை பார்க்க ஓடோடுகிறார்.வேலையில் சிட்டாய் பறந்தாலும், 'டிவி' யில், ரஜினி படம் ஓடும் சப்தத்தை கேட்டால், உலகை மறந்து, படத்தை பார்க்க உட்காரும் பாட்டிக்கு, ஓட்டல் தொழிலில் பெரிதாக வருமானம் இல்லை. பலரை திருப்திப்படுத்துவதுடன், தங்கள் மனதையும் திருப்திப்படுத்துவதாக இருப்பதாலேயே, இந்த தொழிலை செய்கிறோம் எனக் கூறுகிறார், கவுசல்யாவின் மகள் கமலா.



ஆசை



கொரோனாவால்,20 நாட்கள், ஓட்டல் திறக்க முடியாமல் போனது, பண அளவில் இல்லை என்றாலும், மனதளவில் தங்களை பாதித்தாக கூறும் அவர், உதவி கிடைத்தால், சிறிதாக ஓட்டல் துவங்கி, பாரம்பரிய பட்சணங்கள் செய்து, விற்க வேண்டும் என்பதே, தங்கள் ஆசை எனக் கூறுகிறார்.'உழைக்காமல் ஒரு நாளும், உண்ண வேண்டாம்' என, உழைப்பின் திலகமாக திகழும், கவுசல்யா, சதமடிப்பதற்குள், கமலா மாமியின் கனவுகள் நிறைவேறட்டும். இவர்களுக்கு, உதவ விரும்புவோர், 73387 16104 என்ற எண்ணில் அழைக்கலாம்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
23-அக்-202019:24:29 IST Report Abuse
chennai sivakumar வாழ்த்த வயது இல்லை. வணங்கு கிரென்
Rate this:
Cancel
23-அக்-202015:12:18 IST Report Abuse
ருத்ரா உங்களிடம் இருக்கும் உழைப்பு சுறுசுறுப்பு தன்னம்பிக்கை இவைகளை கற்றுக் கொண்டால் முதுமை கூட இளமைதான். வணக்கம் அம்மா. இதுதான் உண்மையான நமக்கு நாமே திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X