வங்கியில் 'போலி' நகை அடமானம் ரூ.34 லட்சம் மோசடியில் ஐவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
00:46

அம்பத்துார்: தனியார் வங்கியில், போலி தங்க நகையை அடமானம் வைத்து, பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலில், ஐவர் கைதான நிலையில், மூவர் தலைமறைவாகினர்.



அம்பத்துார் அடுத்த கொரட்டூர், பாடி, ஒலிம்பிக் காலனியில், தனியார் வங்கி உள்ளது. சிக்கினர்அதில், பாடி கலைவாணர் நகர், விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அன்சாரி ஆகியோர், சேமிப்பு கணக்கு வைத்து உள்ளனர்.அவர்கள், 2018 ஏப்ரல் முதல், அக்டோபர் வரை, தங்கள் வங்கி கணக்கு மூலம், 1,300 கிராம் தங்க நகையை அடமானம் வைத்து, 24.77 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர்.



அதற்கு ஓராண்டாக வட்டி செலுத்தவில்லை. கடந்தாண்டு, மார்ச்சில் வங்கி நிர்வாகம், அவர்கள் அடகு வைத்த நகையை, மறு மதிப்பீடு செய்தது.அப்போது, சுரேஷ், அன்சாரி ஆகியோர் மூலம் அடமானம் வைக்கப்பட்டவை, தங்க முலாம் பூசப்பட்ட, போலி நகை என்பது தெரியவந்தது. இது குறித்து, வங்கி மேலாளர் சுப்ரீயா ரவீந்திரன், 31, கொரட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதையறிந்த மோசடி நபர்கள் தலைமறைவாகினர். ஆனாலும், விசாரணை தொடர்ந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம், சுரேஷ், 36, சிக்கினார்.அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான, பாடியைச் சேர்ந்த அக்பர் சேட், 45, முகமது கபீர், 32, முபாரக், 32, நிஜாம் ராஜா, 38, ஆகியோர் சிக்கினர்.



இவர்கள் ஏற்பாடு செய்த போலி நகைகள் தான், வங்கியின் கடன் பெற அடமானம் வைக்கப்பட்டு உள்ளது.மதிப்புநேற்று மாலை, அந்த ஐவரையும், போலீசார் கைது செய்தனர். அசல் மற்றும் வட்டியுடன், போலி நகைக்காக, அவர்கள் பெற்ற பணத்தின் மதிப்பு, 34 லட்சம் ரூபாய் என, கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு உதவியாக இருந்த, நகை மதிப்பீட்டாளர்கள் ரங்க நாதன், விஸ்வநாதன், கடன் பெற்று மோசடி செய்த அன்சாரி ஆகியோரையும், போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X