அனுமதியற்ற கடைகள் அதிகாரிகள் மூடல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
00:47

மாதவரம்: போக்குவரத்து இடையூறு மற்றும் கொரோனா பரவல் உருவாகும் வகையில், அனுமதியற்ற இடங்களில் திறக்கப்பட்ட பழக்கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் மூடியதால், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



சென்னையில், ஏப்ரலில் கொரோனா வேகமாக பரவியதால், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த, பூ மற்றும் பழக்கடைகள், மாதவரம் புறநகர் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன.அங்கு, 240 கடைகளுடன், தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு, மே மாதம் முதல் இயங்கி வருகிறது. தற்போது, மார்க்கெட் வளாகத்தின், நுழைவு வாயில் அருகிலும், பூ, பழக்கடைகள் இயங்கின.இந்நிலையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை நெருங்குவதால், அங்கு, மேலும் பல கடைகள் திறக்கப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசலும், கொரோனா பரவும் சூழலும் அதிகரித்துள்ளதாக, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு, புகார்கள் சென்றன.சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சியின் அனுமதியற்ற இடங்களில் உள்ள கடைகளை மூட வேண்டுமென, மாநகராட்சி நிர்வாகம், எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தது.ஆனால், சிறு வியாபாரிகள், வழக்கம் போல், கடைகளை திறந்தனர். இதையடுத்து, நேற்று காலை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அங்குள்ள கடைகளை மூட நடவடிக்கை எடுத்தனர்.இதனால், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த மாதவரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, இரு தரப்பினரிடமும் விசாரித்தனர். அதையடுத்து, அரசு உத்தரவை மீறி செயல்பட வேண்டாம் என, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.போக்குவரத்துக்கு இடையூறாகவும், கொரோனா விதிமீறி, தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையிலும், கடைகளை திறந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X