அப்பாடா... ஒருவழியா முதுகு தப்பிச்சாச்சு! உக்கடம் மேம்பாலம் கீழ் ரோடு பணி துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 அக்
2020
02:09
பதிவு செய்த நாள்
அக் 23,2020 01:08

கோவை:நமது நாளிதழில் நேற்று வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, உக்கடம் மேம்பாலத்துக்கு கீழே, தார் ரோடு போடும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை துவக்கியது; ஒரு வாரத்துக்குள் பணியை முழுமையாக முடிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவை, உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக, கரும்புக்கடை வரை கட்டுமான பணி முடிந்து விட்டது; ரோட்டின் இருபுறமும் மழை நீர் வடிகால், மையப்பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.தார் சாலை அமைக்க, ஜல்லி பரப்பப்பட்டிருந்தது. ரோடு போடவில்லை. பண்டிகை காலம் என்பதால், கடைகளுக்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். உக்கடத்தில் இருந்து கரும்புக்கடையை கடப்பதற்குள், ஒருவழியாகி விடுகின்றனர்.மாநில நெடுஞ்சாலைத்துறையின் மெத்தனப் போக்கை தோலுரித்துக் காட்டும் வகையில், நேற்றைய நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து, தார் ரோடு போடும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை நேற்று துவக்கியது; ஒரு வாரத்துக்குள் கரும்புக்கடை வரை, ரோடு போடும் பணி முழுமையாக முடிக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.ரோட்டின் மையத்தில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.


ஆக்கிரமிப்பை அப்படியே விட்டு விட்டால், எதிர்காலத்தில் நிரந்தரமாகி விடும் என்பதால், ஆரம்பத்திலேயே அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருச்சி ரோட்டுக்கு திருப்பம் எப்போது? திருச்சி ரோட்டிலும் அல்வேர்னியா பள்ளி அருகில் இருந்து ரெயின்போ ஸ்டாப் வரை, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் பாலம் கட்டப்படுகிறது. இதன் கீழ்ப்பகுதியிலும் ரோடு படுமோசமாக இருக்கிறது. ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை மேம்படுத்திக் கொடுத்தால், வாகன ஓட்டிகளின் அவதிக்கு தீர்வு கிடைக்கும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumathi - coimbatore,இந்தியா
27-அக்-202018:45:54 IST Report Abuse
sumathi தினமும் 45 கிலோமீட்டர் டூ வீலறில் வேலைக்கு சென்று வருகிறேன். ஆத்துப்பாலம் டு உக்கடம் ரோட்டை நினைத்தே இரண்டு நாட்களுக்கு ஒருநாள் விடுப்பு எடுத்துகொள்வேன். ஆனால் இப்போதான் நிம்மதியாக உள்ளது. தினமலர் செய்தி வெளி இட்டதும் கண்டிப்பாக சாலை போடுவார்கள் என தெரியும். தினமலர்க்கு ரொம்ப நன்றி ...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-அக்-202008:11:06 IST Report Abuse
Mani . V அவசரப்பட்டு அப்படி (முதுகு தப்பித்தது என்று) சொல்ல வேண்டாம். அடுத்த மழையில் ரோடு குண்டும், குழியுமாக ஆன பிறகு பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X