தேசிய நெடுஞ்சாலையில் அச்சம்: கனரக வாகனங்களால் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
01:24

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் கனரக வாகனங்களால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி - உடுமலை ரோடு தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல், ஊஞ்சவேலாம்பட்டி வரை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, திண்டுக்கல் வரை ரோடு விரிவுபடுத்தும் திட்டம் நடக்கிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் ரோடு ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊஞ்சவேலாம்பட்டியில், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ரோட்டில் மணிக்கணக்கில் நிறுத்தப்படுகின்றன. டயர்களில் காற்று ஏற்றவும், ஓட்டல்களில் டிரைவர்கள் உணவு சாப்பிடவும் நிறுத்துகின்றனர். இதனால், ரோட்டின் கணிசமான பகுதி ஆக்கிரமிக்கப்படுகிறது.இதனால், குறுகலான சர்வீஸ் ரோட்டில், இருசக்கர வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், கனரக வாகனங்கள் நிற்கும் இடத்தில் அச்சத்துடன் மக்கள் வாகனங்களை ஓட்டுகின்றனர்; விபத்துகளும் ஏற்படுகிறது.ரோட்டை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்துவதை, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பிலும், இது போன்ற இடையூறுகளை கண்காணித்து அப்புறப்படுத்த, குழு அமைக்க வேண்டியும் அவசியம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X