விருதையில் தொடரும் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
01:29

விருத்தாசலம்; தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



விருத்தாசலம் நகரில் ஜங்ஷன் ரோடு, கடைவீதி நான்குமுனை சந்திப்பு, பெண்ணாடம் சாலை, வேப்பூர் சாலை, கடலுார் சாலை பகுதிகளில் அதிக வணிக நிறுவனங்களும் செயல்படுகின்றன.இவற்றுக்கு வருவோர் அந்தந்த நிறுவனங்களின் வாசலில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி செல்வதால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து பாதிக்கிறது. சரக்கு ஏற்றி வரும் வாகனங்களாலும் நெரிசல் ஏற்படுகிறது.கொரோனா பரவல் காரணமாக ஆறு மாதங்களுக்கு மேலாக வீட்டில் முடங்கியிருந்த மக்கள் பண்டிகைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள், புதுத்துணிகள் வாங்கச் செல்கின்றனர். இவர்கள், பிரதான சாலையோரம் வாகனங்களை நிறுத்திச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பண்டிகை நெருங்கும் நிலையில், போக்குவரத்து நெரிசலால் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கும். விருத்தாசலம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாற்றுப்பாதையை பயன்படுத்தலாம்விருத்தாசலம் நகரில் பயணியர் வாகனங்களை தவிர்த்து, மற்ற வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய, புதிய புறவழிச் சாலைகளில் வாகனங்களை திருப்பி அனுப்பும் உத்தரவு நடைமுறைக்கு வராததால், நகரில் வாகன நெரிசல் அதிகரித்து விட்டது.எனவே, உளுந்துார்பேட்டை, நெய்வேலி மார்க்கமாக வந்து செல்லும் வாகனங்களை செராமிக் தொழிற்பேட்டை, ஆலடி இணைப்பு சாலை வழியாக புதிய புறவழிச்சாலையில், திருச்சி, ஜெயங் கொண்டம், வேப்பூர், சேலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களை பழைய (விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., மார்க்கம்) புறவழிச்சாலையிலும் திருப்பி விட வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X