நடவு இயந்திரத்தில் நெல் விதைப்பு : தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
01:31

மடத்துக்குளம்;மடத்துக்குளத்தில், விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக, நடவு இயந்திரம் வாயிலாக விவசாயிகள் விதைப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மடத்துக்குளம் பகுதியில், ஆண்டுதோறும், ஆறாயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடக்கிறது. நாற்றங்கால் உருவாக்கி, அதில் உள்ள நாற்றுகளை விவசாய தொழிலாளர்கள் பயன்படுத்தி, நடவு செய்வது பாரம்பரிய முறையாகும்.இந்த முறையில் ஒரு ஏக்கர் பரப்பில் நடவு செய்வதற்கு, பத்துக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். நடவு பணிக்கு மட்டும், ஐந்தாயிரம் ரூபாய் செலவு ஆகிறது. குறித்த நேரத்தில் தொழிலாளர்கள் கிடைக்காமல், காலதாமதமாக சாகுபடி நடப்பதும் உண்டு.இதற்குத்தீர்வாக, நடவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மூன்றடி உயரமுள்ள, இரண்டு சக்கரங்களை ஆறு அடி குழாயில் இணைக்கப்பட்ட அமைப்பில், இந்த இயந்திரம் உள்ளது. குழாய்களில் சம அளவு இடைவெளி விட்டு, நான்கு நெல் கொள் கலன்கள் உள்ளன.இதில் தேவையான அளவு நெல்லை நிறைத்து, அதன்பிறகு இயந்திரத்தை வயலில் உருட்டி செல்வதன் வாயிலாக, கொள்கலனில் உள்ள துளைகள் வழியாக வயல்களில் நெல்விதைகள் விழுந்து விதைப்பு செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு சிரமம் குறைகிறது.விவசாயிகள் கூறியதாவது: நாற்றங்கால் அமைத்து சாகுபடி செய்யும் போது, ஒரு ஏக்கர் பரப்பிற்கு, 30 கிலோ நெல் தேவைப்படும். ஆனால் இயந்திரத்தில் நடவு செய்யும்போது, 12 கிலோ போதுமானதாக உள்ளது.இது தவிர, நடவு செய்ய தொழிலாளர்களுக்கு செலவிடப்படும் தொகை மீதம் ஆகிறது. ஒரு விவசாயி, நடவு இயந்திரம் வாயிலாக, பல ஏக்கர் விதைப்பு பணியில் ஈடுபடலாம். விதைப்புக்கு ஒரு நாள் முன்பு விதை நேர்த்தி செய்து, அந்த நெல்லை கொள்கலன்களில் அடைத்து பின்பு விதைக்க வேண்டும். இது தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக உள்ளது இந்த இயந்திரம் ஐந்தாயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X