திடக்கழிவு மேலாண்மை! உடுமலை ஒன்றியத்தில் முடங்கிய திட்டம் :காட்சிப்பொருளான இயற்கை உரக்குடில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
01:33

உடுமலை:கிராம குடியிருப்புகளில், சுகாதார சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இயற்கை உரம் தயாரிக்க கொண்டு வரப்பட்ட, திடக்கழிவு மேலாண்மை திட்டம் முக்கியத்துவம் இல்லாமல், உடுமலை, ஒன்றிய ஊராட்சிகளில், இதற்கான பணிகள் முடங்கியுள்ளது.தமிழக அரசு, ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது மற்றும் உரம் தயாரிக்கும் பணிகளை மேம்படுத்துவதற்கு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


இத்திட்டத்தில், 'துாய்மைக்காவலர்கள்' என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியாளர்கள், குடியிருப்புகளில் குப்பைக்கழிவுகளை சேகரிக்க வேண்டும். இந்த குப்பைகளை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரித்து, மக்கும் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்க வேண்டும். மக்காத குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும்.மக்கும் குப்பைக்கழிவிலிருந்து உரம் தயாரிப்பதற்கு, ஒவ்வொரு ஊராட்சியிலும், தனியாக கட்டட வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதில் பல கட்டடங்களில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. குப்பைக்கழிவுகளை சேகரித்து, கால்வாய் ஓரங்களிலும், திறந்த வெளிகளிலும், தீயிட்டு எரிக்கின்றனர்.துாய்மைக்காவலர்கள் பற்றாக்குறையால், பல குடியிருப்புகளில் குப்பைக்கழிவுகள் சேகரிக்கவும் பணியாளர்கள் இல்லை. இதனால், கழிவுநீர் கால்வாய்களில் குப்பையை கொட்டி, கழிவுநீர் செல்ல வழியில்லாமல், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்துக்கென, அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகள், 38 ஊராட்சிகளில், ஐந்து ஊராட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. மற்ற ஊராட்சிகளின் சுகாதார நிலை, குப்பைக்கழிவுகளை குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் குவிப்பதாக உள்ளது.


இயற்கை உரம் தயாரிக்கும் இத்திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும், கழிவுகளை உரமாக்கி சுகாதாரத்தை மேம்படுத்தவும், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் படி, துாய்மைக்காவலர்கள் குப்பைக்கழிவுகளை சேகரிக்கின்றனர். ஆனால், மகளிர் குழுவினர் தான் கழிவுகளை உரமாக்கும் பணிகளை செய்கின்றனர்.


இப்பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாததால், ஐந்து ஊராட்சிகளில் மட்டுமே கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. தற்போது, மீண்டும் மகளிர் குழுவினரை தேர்வு செய்து, அவர்களுக்கு உரம் தயாரிப்பு பயிற்சி வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பயிற்சி வழங்க குழுவினர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X