கடலுார்; கடலுாரில் தினமலர் மகாலிங்கம்-கற்பகவள்ளி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
சென்னை, முகப்பேர் கோவிந்தராஜன்-உஷா ராணி தம்பதி மகன் இன்ஜினியர் சுரேஷ், கடலுார் தினமலர் மகாலிங்கம்- எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் சென்னை டிவிஷனல் மேனேஜர் கற்பகவள்ளி தம்பதி மகள் ஆர்க்கிடெக் நிபுணர் அபிராமவள்ளி திருமணம் கடலுார் பக்ஷி கோபாலன் செட்டியார் திருமண மண்டபத்தில் இன்று (23ம் தேதி) நடக்கிறது. நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெற்றோர் கோவிந்தராஜன்-உஷா ராணி கோவிந்தராஜன், பண்ருட்டி ஜோதி சிப்ஸ் உரிமையாளர்கள் சீனுவாசன், சக்திவேல் வரவேற்றனர். தொழில் துறை அமைச்சர் சம்பத், நகர செயலாளர் குமரன், எனதிரிமங்கலம் ராமசாமி, ஒன்றியக்குழு சேர்மன் பக்கிரி, ஒன்றிய செயலர் பழனிசாமி, அண்ணாகிராமம் ஒன்றிய செயலர் கந்தன், அமைச்சரின் நேர்முக உதவியாளர் கணேசமூர்த்தி, கோவில் முன்னாள் செயல் அலுவலர் நாகராஜ், தொழிலதிபர் ஜோதி மற்றும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், சென்னை எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் அதிகாரிகள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர், முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி வழங்கப்பட்டது.