உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவர்கள், உடுமலையிலிருந்து அமராவதி வரை, ரோட்டோரங்களில் விதைபந்துகளை வீசும், பணியில் ஈடுபட்டனர்.மாணவர்களை பாராட்டும் வகையில், நிகழ்ச்சி இரண்டாம் கிளை நுாலகத்தில் நடந்தது. நுாலக வாசகர் வட்டத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். நுாலகர் கணேசன் தலைமை வகித்தார். முன்னாள் தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் சத்தியம் பாபு முன்னிலை வகித்தார். உடுமலை டி.எஸ்.பி., ரவிக்குமார், மாணவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜாக்குவார் ஸ்கேட்டிங் அகாடமி ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.