பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகாவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதில், 668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.பொள்ளாச்சி தாலுகாவில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதுடன், குணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பொள்ளாச்சி தாலுகாவில், மொத்தம், 757 பேருக்கு தொற்று உறுதியானதில், 668 பேர் குணமடைந்துள்ளனர்; 63 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்; 26 பேர் இறந்துள்ளனர்.நேற்றைய நிலவரம்பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பகுதியை சேர்ந்த, 38 வயதானவர்; நெகமம் எஸ்.ஐ., சொர்ணபுஷ்பம் காலனி, 63 வயதான முதியவர்; செல்லப்பன் வீதியில், 50 வயதான பெண்; வஞ்சியாபுரம் பிரிவு, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், கோவிந்தனுார் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும்; திவான்சாபுதுார், ஆனைமலையில் தலா ஒருவருக்கும் என மொத்தம், ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.