மாநகராட்சி குழுவினர் திடீர் ஆய்வு: நெருக்கியடித்த கடைகளுக்கு 'பைன்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
01:49

கோவை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கோவை மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர், வர்த்தக நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறையை பின்பற்றாத கடைகளுக்கு, அபராதம் விதித்தனர்.பண்டிகை காலம் என்பதால், கோவை நகர வர்த்தக பகுதிகளில் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. சமூக இடைவெளி பின்பற்றுவது, முக கவசம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பலரும் பின்பற்றுவதில்லை. அதனால், மீண்டும் தொற்று பரவ வாய்ப்பிருப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரித்து, வர்த்தக நிறுவனங்களில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.கமிஷனர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், ஒப்பணக்கார வீதியில் உள்ள கடைகளுக்கு சென்றனர்.நுழைவாயிலில் கிருமி நாசினி வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம், கையுறை அணிந்து பணிபுரிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட தொற்று பரவல் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை, கடைகளில் ஒலிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என, கமிஷனர் அறிவுறுத்தினார்.இதேபோல், நகர் நல அலுவலர் ராஜா தலைமையில், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரசேகர், ஆண்டியப்பன் ஆகியோர் கிராஸ்கட் ரோட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். விதிமுறையை கடைபிடிக்காத, 40 கடைகளில், 31 ஆயிரத்து, 800 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X