பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் தங்கவேல்,65. இவரது மனைவி அய்யம்மாள்,55. இவர், அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றுகிறார்.மனைவியை பள்ளியில் இறக்கி விட செல்லும் தங்கவேல், பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் தங்கவேல், பள்ளி தலைமையாசிரியை அய்யம்மாளை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கணவருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வட்டார கல்வி அலுவலரிடம் அறிக்கை பெறப்பட்டது. அதன்படி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்' என்றனர்.