லேத் பட்டறை உரிமையாளர் கொலை: மூவரை பிடித்து போலீசார் விசாரணை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
லேத் பட்டறை உரிமையாளர் கொலை: மூவரை பிடித்து போலீசார் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2020
02:03

கோவை:கோவையில் லேத் பட்டறை உரிமையாளர் கொலையில், ஆட்டோ டிரைவர் உள்பட மூவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாக்யலட்சுமி, 45. இவரது வீட்டில், ஆட்டோ டிரைவர் மைக்கேல், 24 மற்றும் திருநங்கைகள் ராகிணி, 32, வெண்பா,26, ஆகிய மூவர் குடியிருந்தனர். பாக்யலட்சுமியிடம், ஆர்.சி., புத்தகத்தை அடமானம் வைத்து மைக்கேல், 38 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றிருந்தார்.மைக்கேல் உட்பட மூவரின் நடவடிக்கை சரியில்லாததால், பாக்யலட்சுமியின் மகன் இளங்கோவன் வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்தார். வீட்டை காலி செய்த நிலையில், பாக்யலட்சுமி கொடுத்த கடனை திருப்பி கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின், மைக்கேல், திருநங்கைகள் ராகிணி, வெண்பா ஆகியோருடன் பாக்யலட்சுமி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். பாக்யலட்சுமியின் மகன் இளங்கோவன், 27 மற்றும் அவரது நண்பர்கள் சவுந்தர், 23, அருண், 28, கிருபாகரன், 19 ஆகியோரை மைக்கேல் கத்தியால் தாக்கினார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, லேத் பட்டறை உரிமையாளரான சவுந்தர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளங்கோவன் உட்பட மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தலைமறைவாக இருந்த மைக்கேல், ராகிணி, வெண்பா ஆகியோரை பீளமேடு போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X