திண்டிவனம்; கிளியனூர் அருகே நின்றிருந்த டிப்பர் லாரி மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் இறந்தார்.கடந்த 20ம் தேதி மாலை, புதுச்சேரி மாநிலம், மேட்டுப்பாளையம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 13 பெண்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ, கிளியனூர் அடுத்த தைலாபுரத்தில், நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் 2 பெண்கள் அதே இடத்தில் இறந்தனர். படுகாயமடைந்த 11 பெண்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இதில், கணசேன் மனைவி சிவபூஷணம், 42; நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ேஷர் ஆட்டோ விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.