திண்டிவனம்: திண்டிவனத்தில், பா.ஜ.,சார்பில் தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது.திண்டிவனம் நகராட்சி பஸ் நிலையத்தில், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நேற்று காலை நடந்தது.பா.ஜ.,நகர தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கையெழுத்து இயக்கத்தை, பா.ஜ.,கல்வியாளர் பிரிவின் மாநில செயலாளர் தேவராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் தர்மலிங்கம், துரைசோழன், தனசேகரன், தீபக்பட்டேல், நவநீதகண்ணன், மணிபால், அய்யப்பன், செங்கேணி, சீனுவாசன், ரஜினிகாந்த், பாலாஜி, நவகோடி, நாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.