விழுப்புரம்: பெயிண்டரை தாக்கிய மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந் தவர் ராஜேந்திரகுமார் மகன் சந்தோஷ், 25; பெயிண்டர் வேலை செய்து வருகின்றார். இவர் கடந்த 20ம் தேதி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் குடிபோதையில், சாலாமேட்டை சேர்ந்த சக்தி வேல், 35; கே.கே., ரோடு அண்ணா நகர் காமராஜ், 35; மற்றும் செல்வராஜ், 33; ஆகியோரிடம் பிரச்னையில் ஈடுபட்டார். இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், காமராஜ், செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து சந்தோைஷ திட்டி தாக்கினர்.இது குறித்த புகாரின் பேரில், சக்திவேல் உள் ளிட்ட மூன்று பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.