விழுப்புரம்: விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் தலைமை தாங்கி, விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் கையெழுத்து பெற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் நாராயணசாமி, ராஜ்குமார், சேவா தள பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் காஜா மொய்தீன், விஸ்வநாதன், சேகர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தமிழக காங்., கமிட்டி தலைவர் அழகிரி பிறந்த நாளையொட்டி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் ஸ்ரீராம், துணைத் தலைவர் ராஜமாணிக்கம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் செல்வம், வட்டார தலைவர்கள் காமராஜ், வெங்கடேசன், மகளிர் அணி நிர்வாகிகள் விட்டோபாய், ராஜேஸ்வரி, வசந்தா, கீதா, லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.