மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளிக்கு தொடர் அங்கீகார ஆணையை கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கி சிறப்புரையாற்றி னார். விழாவிற்கு எம்.எல். ஏ.,க்கள் குமரகுரு, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி வரவேற்றார். விழாவில் மயிலம் ஒன்றியம் ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி முதல்வர் அகிலா பழனியப்பன் தொடர் அங்கீகார ஆணையை அமைச்சரிடம் பெற்றுக் கொண்டார்.