செஞ்சி; வயிற்று வலிதாளாமல் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் 38; ஆட்டோ டிரைவர்; இவருக்கு கடந்த 8 மாதமாக வயிற்று வலி இருந்து வந்தது. நேற்று காலை மனைவி ரம்யா, 35: வெளியே சென்றிருந்தார். அப்போது தனியாக இருந்த மோகன்ராஜ் வீட்டின் முன்பு இருந்த பூவரச மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரம்யா கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து மோகன்ராஜ் உடலை பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.