விழுப்புரம்: சிறுமி பலாத்கார வழக்கில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க கோரி, தாய் விழுப்புரம் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
செஞ்சி அருகே கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேணு. சலவை தொழிலாளி. இவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில்,என் மகளை கடந்த 2018 ம் ஆண்டு எங்கள் ஊரைச் சேர்ந்த அருண்(எ)சரத்குமார், பாலியல் பலாத்காரம் செய்தார். செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் சரத்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.என் குடும்பத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அச்சுறுத்தல் வருகிறது. எனக்கான நீதியை பெறவும், பாதுகாப்பிற்காகவும் சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பது மூலமே சாத்தியமாகும். எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பும், சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க ஆவனசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.