விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே மகளைக் காணவில்லை என போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.கண்டமங்கலம் அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்பவரின் 18 வயது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரை கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.