திண்டிவனம் சாலையில் குவிந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
திண்டிவனம் சாலையில் குவிந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2020
02:10

திண்டிவனம்: திண்டிவனம் - புதுச்சேரி சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையோரம் திருமண மண்டபம் உள்ளது. திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் இந்த பிரதான சாலையில், மண்டபத்தில் நடைபெறும் விசேஷங்களுக்காக கட்டப்படும் வாழை மரங்கள், கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை சாலையோரம் கொட்டி வருகின்றனர்.இதே போன்று அந்த பகுதியில் வசிப்பவர்களும் சாலையோரம் குப்பைகளைக் கொட்டி வருவதால், அதிக அளவில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X