பயிற்சி பெண் போலீசாருக்கு எல்.எல்.ஆர்., வழங்கல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பயிற்சி பெண் போலீசாருக்கு எல்.எல்.ஆர்., வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2020
02:12

திண்டிவனம்: வட்டார போக்குவரத்து அலுவகத்தில் காவலர் பயிற்சி மையத்தின் பெண் காவலர்களுக்கு ஓட்டுர் பழகுநர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலம் அருகே கொல்லியங்குணத்தில் காவலர் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள 305பெண் காவலர்களுக்கு தனியார் டிரைவிங் பள்ளி சார்பில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. பயிற்சியில் சேர்ந்துள்ள பெண் காவலர்கள் 30 பேர்களுக்கு முதற் கட்டமாக, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமம்(எல்.எல்.ஆர்.) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல்,பெண் காவலர்களுக்கு எல்.எல்.ஆர்.சான்றிதழை வழங்கினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X