பழநியின் கழிவுநீரால் பாழாகும் புண்ணிய நதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
03:13

திண்டுக்கல் : பழநியின் புண்ணிய நதி எனப்படும் சண்முகநதி சாக்கடை போல் கழிவுநீர் தேங்கி புனிதம் கெட்டு வருகிறது.



பழநியில் முருகனுக்கு அடுத்து சிறப்பு பெற்றது சண்முகநதி. பக்தர்கள் இங்கு குளித்தபின் முருகனை தரிசனம் செய்வது ஐதீகம். இந்தநதி மானூர், அக்கரைப்பட்டி, கீரனூர், அலங்கியம் வழியாக காவிரியின் துணை நதியான அமராவதியில் கலக்கிறது. பல கோயில்களில் கும்பாபிேஷகத்திற்கு இங்கிருந்து புனிதநீர் எடுத்துச் செல்வர்.இத்தனை சிறப்பு பெற்ற சண்முகநதி தற்போது பாழாகி வருகிறது.



கண்டபடி கழிவுநீர் கலப்பதால் சாக்கடையாக தேங்கி நிற்கிறது. கால்நடைகள் குளிக்கவே பயன்படுகிறது. ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீர் இருப்பதே தெரியாத அளவுக்கு பசுமை போர்வையுடன் உள்ளது. கார்த்திகை மாதம் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அதற்குள் தகுந்த ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.



துாய்மைப்படுத்த வேண்டும்



ஹிந்து தமிழர் கட்சி யின் ராமரவிக்குமார் கூறியதாவது: கங்கையை போல சண்முகநதியையும் தூய்மைப்படுத்துவது அவசியம். கோயிலுக்கு வரும் பலஆயிரம் பக்தர்கள் சண்முகநதியில் நீராடுவது வழக்கம். இந்நிலையில் அமலச்செடிகள் சூழ்ந்து, கழிவுநீர் கலந்து, அழுக்கு நீராக உள்ளது வேதனை தருகிறது. இதன் கரைகளை அகலப்படுத்தி கழிவு நீர் கலக்காமல் பராமரிக்க வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-202014:47:34 IST Report Abuse
oce இன்றுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகள் எதுவும் தூய்மையுடன் இருக்க வாய்ப்பில்லை. மத சார்பற்ற நாடு என்று முத்திரை குத்தி நீண்ட வருடங்களாகி விட்டது.தற்போது புண்ணிய நதிகள் என எதையும் கருத முடியாது.
Rate this:
Cancel
23-அக்-202010:13:31 IST Report Abuse
ருத்ரா பாவம் தீர்க்கும் நதிகள் எல்லாம் கூவமாக மாற்றினால் தமிழகத்திற்கு தனி அடையாளமாக போய்விடும். விரைவில் சரி செய்ய. வேண்டும்.
Rate this:
Cancel
23-அக்-202009:08:19 IST Report Abuse
ஆப்பு அரசுதான் தூய்மைப் படுத்த வேண்டும்னு கூவுவாங்க, போராட்டம் நடத்துவாங்க. தாங்களா ஒரு துரும்பு எடுத்துப் போட மாட்டாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X