நத்தம் : நத்தம் ஒன்றியம் ரெட்டியபட்டி, லிங்கவாடி, பரளிபுதூர் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கான துவக்க விழா நடந்தது.
ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுநிதி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஆதிதிராவிடர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களில் இருந்து ரூ.6 கோடி மதிப்பில் தார் சாலை, பேவர் கல் பதித்தல், சிமென்ட் ரோடு, வடிகால், பள்ளி சுற்றுச் சுவர் உள்ளிட்ட பணிகள் துவங்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் சிவலிங்கம் கலந்து கொண்டனர்.