சேலத்தில் மாயமானோர் மீது போலீஸ் திடீர் அக்கறை: பழைய புகார்களையும் தூசு தட்டும் இன்ஸ்பெக்டர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
08:23

சேலம்: மாயமாவோர் குறித்து அளிக்கப்படும் புகார் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்ட நிலையில், ஏற்கனவே காணாமல் போனவர்கள் மீதும், திடீர் அக்கறையாக, அந்த புகார்கள் தூசு தட்டப்பட்டு வழக்குப்பதியப்படுகிறது.


சேலம் மாநகரில், ஆண்டுக்கு சராசரியாக, 85 பேர் மாயமாகும் நிலையில், 65 புகார் மீது வழக்குப்பதிந்து, 20 பேரை மட்டுமே போலீசார் கண்டுபிடித்து, உறவினர்களிடம் ஒப்படைத்து கணக்கு காட்டி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சந்திரசேகரன், அனைத்து உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களுக்கு பிறப்பித்த உத்தரவில், 'காணாமல் போனவர்கள் குறித்து அளிக்கப்படும் புகார் மீது உடனே வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அளித்து, நிலுவையில் உள்ள புகார் மீதும், வழக்குப்பதிய வேண்டும்' என, கூறியிருந்தார். இதையடுத்து, சேலம் மாநகரில் உள்ள, சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், 14ல், பழைய புகார்களை, இன்ஸ்பெக்டர்கள் தூசி தட்டி வருகின்றனர். குறிப்பாக, பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், பெரமனூரை சேர்ந்த பாஸ்கர், 63, கடந்த ஜன., 22ல் மாயமானது, சாமிநாதபுரம் சுமதி, 35, ஆக., 13ல் மாயம், அரிசிபாளையம் தினேஷ்குமார், 34, ஆக., 15ல் மாயம், பள்ளப்பட்டி சந்தியா, 24, அவரது மகள் யாஷினி, ஆக., 22ல் மாயம், காமலாபுரம் சித்தையன், 50, அக்., 17ல் மாயமானது என, பழைய புகார்கள் தூசி தட்டப்பட்டு, வழக்குப்பதியப்பட்டுள்ளது. அதேபோல், சேலத்தில், 35 புகார் மீது, ஒரே வாரத்தில் வழக்குப்பதிந்து, காணாமல் போனவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X