காய்கறி, பருப்பு, எண்ணெய் விலை கிடுகிடு: ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை எகிறியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
09:01

சேலம்: காய்கறி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வால், ஓட்டல்களில், உணவுப்பண்டங்கள் விலை, ஐந்து முதல், 10 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.


உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயம் விலை, இரு மடங்கு உயர்ந்த நிலையில், அனைத்து வகை காய்கறி விலையும், கிலோவுக்கு, ஐந்து முதல், 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் விலை, லிட்டருக்கு, ஐந்து முதல், 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மளிகை பொருட்கள் விலை, 15 சதவீதம், பருப்பு விலை கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இவற்றுக்கு எல்லாம் மேலாக, ஊரடங்கில் ஓட்டல்கள் அடைக்கப்பட்டதால், அங்கு பணிபுரிந்த, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, உள்ளூர் தொழிலாளர்களின் சம்பளம், 15 சதவீதம் அதிகரித்த நிலையில், கடை வாடகை, 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓட்டல்களில், வருவாய் எதிர்பார்த்த அளவும் இல்லாததால், டிபன் உள்ளிட்ட உணவு பண்டங்களின் விலையை உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர். பிளைன் மசாலா, மசாலா ரோஸ்ட், ஆனியன் ஊத்தாப்பம், ஆனியன் ரவா, ஆனியன் ரோஸ்ட், நெய் ரவா, நெய் ரோஸ்ட், முந்திரி ஊத்தாப்பம், முந்திரி ரோஸ்ட், காளான் ரோஸ்ட், காலிபிளவர் ரோஸ்ட், நெய் காளான், நெய் மசாலா ரோஸ்ட், நெய் ஆனியன் ஆகிய தோசை வகைகள், பழைய விலையில் இருந்து, தலா, ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையை விட, பிரபல ஓட்டல், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஓட்டல், நட்சத்திர ஓட்டல்களில், டிபன் விலை, மேலும், 15 சதவீதம் உயர்த்தி விற்பனை செய்கின்றனர். அதேநேரம், சாப்பாடு, கலவை சாதங்கள் விலை உயர்த்தப்படவில்லை.


இதுகுறித்து, ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'சங்கத்தில் இருந்து விலையை உயர்த்த உத்தரவிடவில்லை. மூலப்பொருட்கள் விலை உயர்வால், தொழிலை தொடர, உரிமையாளர்கள் தன்னிச்சையாக உணவு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர்' என்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X