பெரிய வெங்காயம் வரத்து சரிவால் விலை உச்சம்: விளைச்சல் பாதிப்பால் சின்ன வெங்காயமும் கிடுகிடு; குடோன்களில் சோதனை நடத்த தயாராக உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
09:12

பெரிய வெங்காயம் வரத்து சரிவால், வெளி மார்க்கெட்டில், அதன் விலை கிலோ, 110 ரூபாயாக அதிகரித்த நிலையில், சின்ன வெங்காயம் விலையும் எகிறியது. மேலும் விலை உயரும் நிலை உருவாகியுள்ளது. இதனால், குடோன்கள், மண்டிகளில் சோதனை நடத்த அதிகாரிகளை தயார் நிலையில் இருக்கும் படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


சென்னையில் கோயம்பேடு, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சேலம் - தலைவாசல், மதுரை - மாட்டுத்தாவணி, நெல்லை - நயினார்குளத்தான் கரை, நாகர்கோவில் - வடசேரி காய்கறி மார்க்கெட்டுகள், முக்கிய நகரங்களில் உள்ள, 179 உழவர்சந்தைகளுக்கு தேவையான, பெரிய வெங்காயம், மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக், சோலாப்பூர்; கர்நாடகா மாநிலம், மைசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. பருவமழை தொடங்கும் அக்டோபர், நவம்பரில், விலை எகிறும் வெங்காயம், ஜனவரிக்கு பின் சரியும். மூன்று ஆண்டாக பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், பயிர்களில் சேதம் அதிகரிப்பால், விவசாயிகள் வெங்காய சாகுபடியில் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில், வெளிமாநில வெங்காயம் வரத்தில் சரிவு, பெரிய வியாபாரிகளின் பதுக்கலால், வெங்காயம் கிலோ, 120 ரூபாய் வரை விற்பனையானது. பின், மத்திய, மாநில அரசுகள், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து, வெங்காயத்தை வரவழைத்ததால், அதன் விலை கட்டுப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் தற்போது, வடமாநிலம், கர்நாடகா வெங்காய வரத்தில் சரிவால், மீண்டும் அதன் விலை உயர்ந்து வருகிறது. இதில், வெங்காயம் விளையும் இடங்களில் உள்ள குடோன்களில், மத்திய அரசு சோதனை நடத்தியும், பெரிய அளவில் மூட்டைகள் சிக்கவில்லை. அதேநேரம், தமிழக முக்கிய நகரங்களில், வெங்காய குடோன்களில் பதுக்கல் தொடர்கிறது. இதனால், அதன் விலை, இருமடங்கு உயர்ந்துள்ளது.


உழவர்சந்தைகளில், கடந்த மாதம் வரை, பெரிய வெங்காயம் முதல் தரம் கிலோ, 40க்கு விற்பனையானது, நேற்று, 86 ரூபாய், இரண்டாம் தரம், 35க்கு விற்பனையானது, 75 ரூபாய், மூன்றாம் தரம், 30க்கு விற்பனையானது, 70 ரூபாயாக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில், முதல் தரம் கிலோ, 45க்கு விற்றது, 110 ரூபாய், இரண்டாம் தரம், 35க்கு விற்றது, 100 ரூபாய், மூன்றாம் தரம், 30க்கு விற்றது, 90 ரூபாயாக விலை உயர்ந்தது. வெங்காயம் விலை உயர்வால், அதை இறக்குமதி செய்து, சென்னையில் மட்டும் விற்பனை செய்கின்றனர். அதுவும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கிடைப்பதால், மற்ற இடங்களில் எகிப்து வெங்காயம் கிடைக்கவில்லை. சென்னைக்கு வந்துள்ள எகிப்து வெங்காயம், பிற நகரங்களுக்கு, இன்னும் விற்பனைக்கு வரவில்லை. பெரிய வெங்காயத்துக்கு போட்டியாக, சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது. உழவர்சந்தைகளில், கிலோ, 35க்கு விற்ற சின்ன வெங்காயம், 74 ரூபாய், இரண்டாம் தரம், 30க்கு விற்றது, 70 ரூபாயாக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில் முதல் தரம், 40க்கு விற்றது, நேற்று, கிலோ, 90 ரூபாய், இரண்டாம் தரம், 35க்கு விற்றது, 80 ரூபாயாக எகிறியது. இந்த விலை மேலும் உயரும் என மொத்த வியாபாரிகள் கூறி வருகின்றனர். இதனால், நடுத்தர ?ஹாட்டல்களில் வெங்காய பச்சடி நிறுத்தப்பட்டுள்ளது. சில ?ஹாட்டலில், வெங்காயத்துடன் சரிபாதியாக முட்டைக்கோஸ் கலக்கப்பட்டு, வெங்காய பச்சடி தயாரித்து வினியோகிக்கப்படுகிறது. பல அசைவ ?ஹாட்டல்களில், வெங்காய ஆம்ப்லெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டை வெங்காய வியாபாரி குமார் கூறியதாவது: வடமாநிலங்களில் இருந்து, கடந்த மாதம் வரை, தமிழக மார்க்கெட்டுகளுக்கு, வாரம், 200 லாரிகளில் விற்பனைக்கு வந்த பெரிய வெங்காயம், தற்போது, 50 லாரிகளாக சரிந்துள்ளது. இந்த வெங்காயத்தை, பெரிய ?ஹாட்டல் உரிமையாளர்கள் மொத்தமாக வாங்கிச்செல்வதால், மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேநேரம், ஒட்டன்சத்திரம், கோவை, நாமக்கல், திருச்சி, துறையூர், சேலம் ஆகிய இடங்களில், சின்ன வெங்காயம் விளைச்சலும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், அதன் வரத்தும் சரிந்து, விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


சோதனைக்கு உத்தரவு: பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில், வெங்காய தேவை அதிகரித்துள்ளது. அரசு எச்சரிக்கைக்கு பின்னரும், வெளி மார்க்கெட்டில் விலையில் சரிவு ஏற்படவில்லை. இதனால், அனைத்து நகரங்களிலும், வியாபாரிகளின் குடோன், மண்டிகளில் சோதனை நடத்த, வேளாண் வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை தயார் நிலையில் இருக்கும்படி, உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X