திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முகக்கவசம், சமூகஇடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியம் செய்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் கோர தாண்டவரம் ஆடிய நிலையில் 20 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 9644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9134 பேர் குணமடைந்துள்ளனர்.ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தினமும் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து, டிஸ்சார்ஜ் ஆவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சித்தா கேர் சென்டர், அரசு, தனியார் மருத்துவமனைகள் என பல இடங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் 'டிஸ்சார்ஜ்' விகிதம் அதிகரித்துள்ளது.அதே நேரத்தில் இறப்பு விகிதமும் கட்டுக்குள் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய் உள்ளவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.போலீசார், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில்லை. இனி பருவ மழைக்காலம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருந்தால் கொரோனா இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் இருக்கும்.