கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் தாசில்தாருக்கு வி.ஏ.ஓ.,சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கண்டாச்சிபுரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தாசில்தார் கார்த்திகேயனுக்கு வி.ஏ.ஓ., சங்கத்தினர் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றனர். வட்ட செயலாளர் தேசிங்கு, தலைவர் ராமதாஸ், மாவட்ட பிரசார செயலாளர் பரந்தாமன் முன்னிலையில்வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிய தாசில்தார் கார்த்திகேயனுக்கு முகையூர் மற்றும்,அரகண்டநல்லுார் குறுவட்ட வி.ஏ.ஓ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதில் கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் லோகேஸ், வெற்றிவேந்தன், ஜெகன், பாலாஜி,பார்திபன்,சங்கர்,பிரசாத்,அன்புவிழி ஆகியோர் பங்கேற்றனர்.