பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2020
23:38

திண்டிவனம் : திண்டிவனம் ரோஷணையிலுள்ள சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.



திண்டிவனம் நகராட்சி ரோஷணை பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் தெரு, செஞ்சி ரோட்டை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. சிமென்ட் சாலை போட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், சாலை இருந்ததற்கான அடையாளமின்றி, குண்டு, குழியுமாக காட்சியளிக்கின்றது.மழைக்காலம் என்பதால், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.



சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். ரோஷணை பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள சாலையை சீர் செய்து, புதிதாக போடுவதற்கு நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X