சார்... என்னுடைய 'பணத்த' காணோம்...!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2020
23:39

பெ.நா.பாளையம்:பரபரப்பாக இருந்தது துடியலுார். இங்குள்ள, வங்கி ஏ.டி.எம்., ஒன்றில், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சந்திரமோகன், தன் வங்கி கணக்கில், 21 ஆயிரத்து, 500 ரூபாய் 'டிபாசிட்' செய்ய சென்றார். அப்போது, இவர் கொஞ்சம் தடுமாற, அருகில் இருந்து கவனித்து வந்த 'மாஸ்க்' அணிந்திருந்த ஒருவர், 'நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்' என்று சொல்லி, சந்திரமோகனுக்கு 'டிபாசிட்' செய்து கொடுத்தார். 'ரொம்ப நன்றி' என்று சந்திரமோகன் சொல்ல, அதை பவ்யமாக ஏற்றுக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் பறந்தார் அந்த நபர்.சிறிது நேரம் கழித்து, பணம் டிபாசிட் செய்யப்பட்டது, குறுந்தகவலாக வரவில்லையே என்று சந்திரமோகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணக்கில் இருந்த இருப்பை சரிபார்த்த போது தான் தெரிந்தது, தன்னுடைய கணக்கில், அந்த பணம் டிபாசிட் ஆகவில்லை என்று.தான் ஏமாற்றப்பட்டோம் என்று அறிந்து கொண்ட சந்திரமோகன், உடனடியாக, வங்கி நிர்வாகத்தை அணுகி, புகார் செய்தார். அந்த பணம், கோவை ஒண்டிப்புதுார் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் 'டிபாசிட்' செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அதை முடக்குவதற்குள், அந்த கணக்கில் இருந்து, 20 ஆயிரம் எடுக்கப்பட்டது.இதையடுத்து, சந்திரமோகன், துடியலுார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், எஸ்.ஐ., தாமோதரன் ஆகியோர் விசாரணையை துவக்கினர். 'சிசிடிவி' காட்சிகளை ஆராய்ந்தனர். பின், கோவை ஒண்டிப்புதுார் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவரிடம் விசாரித்தனர். அவர் சொன்னது, போலீசாருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.''தன்னுடைய ஏ.டி.எம்., கார்டு தொலைந்து விட்டது; அதை முடக்க வங்கிக்கு தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தன் வங்கி கணக்கில், 21 ஆயிரத்து, 500 'டிபாசிட்' செய்யப்பட்டது, குறுந்தகவலாக வந்தது. வங்கியில் காசோலை செலுத்தி, 20 ஆயிரம் பணத்தை எடுத்து விட்டேன்,'' என்றார்.'சரி... தொலைந்த உங்கள் ஏ.டி.எம்., கார்டின் 'ரகசிய எண்' மற்றவருக்கு எப்படி தெரிந்தது என்று போலீசார் கேட்க, அவரோ, வெள்ளந்தியாக... ஏ.டி.எம்., கார்டின் பின்னால், 'ரகசிய எண்' எழுதி வைத்திருந்தேன்' என்று சொன்னாரே பார்க்கலாம்.போலீசார் கொஞ்சம் டென்ஷனாகி, 'வங்கி சார்பிலும், போலீசார் சார்பிலும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், மற்றவர்களுக்கு தெரியும்படியா எழுதி வைப்பீர்கள்' என்று, கடிந்து கொண்டனர். 'இனி மேல் இதுபோல் நடக்காது சார்' என்று, அவரும் மன்னிப்பு கேட்டார். பின், பணத்தை மீட்டு, சந்திரமோகனிடம் ஒப்படைத்தனர் போலீசார்.உதவிய நபருக்கு பயம்'சந்திரமோகனுக்கு உதவிய நபரின் கையில் தான் கிடைத்திருக்கிறது, கோவை ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் தொலைத்த ஏ.டி.எம்., கார்டு. அந்த கார்டில், பணம் டிபாசிட் செய்து, வேறொரு இடத்தில் உள்ள ஏ.டி.எம்.,ல் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று நினைத்திருப்பார். ஆனால், அதற்குள், ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர், விரைவாக எடுத்து விட்டதால், பணம் உடனடியாக மீட்கப்பட்டது' என்றனர் போலீசார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X