விழுப்புரம் : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 380 ரூபாய் வழங்க வேண்டும்.ஊதியமின்றி பணியாற்றும் அலுவலக துப்புரவு தொழிலாளர்களுக்கு நிரந்தர உத்தரவு, ஒப்பந்த தொழிலாளி, பகுதிநேர தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கருணை தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.துணை தலைவர் குணசேகர் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் சேகர், துணை தலைவர் புருஷோத்தமன், தலைவர் அம்பிகாபதி, திட்ட பொருளாளர் அருள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.