திண்டிவனம் : திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
முகாமிற்கு, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.ஆரோக்கியமான உடல் எடை பராமரித்தல், உடற்பயிற்சி செய்தல், போதுமான உறக்கம், தாய்ப்பால்கொடுத்தல், மாதம் ஒரு முறை சுய மார்பக பரிசோதனை மேற்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இதில், 27 பயனாளிகளுக்கு கால்பாஸ்கோப்பி எனும் கர்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில், டாக்டர்கள் முரளிஸ்ரீ, ராஜசேகர், சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.