'டிஜிட்டல்' வர்த்தகம்: 'இ-நாம்' திட்டத்தில் கொப்பரை ஏலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 அக்
2020
11:53
பதிவு செய்த நாள்
அக் 23,2020 23:41

ஆனைமலை;ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், இரண்டரை ஆண்டுகளில் 'இ-நாம்' திட்டத்தில், 23 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளதாக, அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.நாடு முழுவதிலும் அனைத்து வேளாண் சந்தைகளையும் ஒருங்கிணைத்து, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய, மத்திய அரசு 'தேசிய விவசாய சந்தை' (இ-நாம்) திட்டத்தை, 2018ல் துவங்கியது.


இந்த திட்டத்தின் படி, 'டிஜிட்டல்' முறையில் விவசாயிகள், வியாபாரிகளை இணைத்து, 'ஆன்லைன்' வாயிலாக விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, ஆனைமலையில், 2018 மார்ச்., 20ம் தேதி முதல் இத்திட்டத்தில் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. 'இ-நாம்' திட்டத்தில் இதுவரையில், 23 கோடி ரூபாய்க்கு ஏலம் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், 'டேப்' மொபைல் பயன்படுத்தி, 'இ-நாம்' செயலியில், கொப்பரை விலையை வியாபாரிகள் தேர்வு செய்கின்றனர்.வியாபாரிகள் நிர்ணயித்த விலை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டு ஏலம் நடக்கிறது. ஏலம் முடிந்த, 24 மணி நேரத்துக்குள் 'இ.சி.எஸ்.,' வாயிலாக, ஆன்லைனில் விவசாயிகளின் வங்கிக்கணக்குக்கு, வியாபாரிகள் அனுப்பும் பணம் சென்றடைகிறது.


திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து, கடந்த, 20ம் தேதி வரை, 6,298 விவசாயிகள், 125 வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். 2,699 டன் கொப்பரை ஏலம் விடப்பட்டு, 23 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.மிகவும் எளிமையான முறையில், ஆன்லைனில் ஏலம் நடக்கிறது. பாதுகாப்பான முறையில் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. திட்டம் நடைமுறைக்கு வந்த பின், விவசாயிகளுக்கு, மிக விரைவில் கொப்பரைக்கான பணம் கிடைக்கிறது. இந்த 'டிஜிட்டல்' வர்த்தகம் வியாபாரிகளிடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தியுள்ளது.இத்தனை வசதிகள் இருந்தும், சில விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வராமல், பண்ணையிலேயே வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு கொப்பரையை விற்று நஷ்டமடைகின்றனர்.


விவசாயிகள் 'இ-நாம்' திட்டத்தில் பதிவு செய்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில் பங்கேற்று லாபமடைய முன்வர வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.இடைத்தரகர் இல்லை!'இ-நாம்' திட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள் பதிவு செய்து பங்கேற்கின்றனர். விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தனித்தனி குவியலாக குவிக்கப்பட்டு, பிரத்யேக எண் வழங்கப்படுகிறது. அதனை பார்வையிட்டு வியாபாரிகள், விலை நிர்ணயம் செய்கின்றனர். ஒருவர் நிர்ணயிக்கும் விலையை விட குறைவாக மற்றவர்கள் ஏலம் கேட்க முடியாது. அதேபோன்று ஒரு வியாபாரி நிர்ணயம் செய்த விலையை மற்றவர்கள் பார்க்க முடியாது. அதிகபட்ச கேட்பு தொகை ஏலத்தொகையாக நிர்ணயம் செய்யப்படுகிறது.


இந்த முறையில், இடைத்தரகர்கள் இன்றி, நேரடி வர்த்தகம் நடப்பதால், விவசாயிகளுக்கு முழு பலனும் கிடைக்கிறது. விரைவில், கொப்பரையை படம் எடுத்து பதிவேற்றம் செய்தால், வெளியூரில் இருக்கும் வியாபாரிகளும் 'ஆன்லைன்' வாயிலாக விலை நிர்ணயிக்கும் முறை நடைமுறைக்கு வரும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-அக்-202010:46:25 IST Report Abuse
ஆப்பு சூப்பர். வெங்காய வியாபாரிகளைத் தொடர்ந்து கொப்பரை வியாபாரிகள் வருமானம் ரெட்டிப்பாகும். சரி, வாங்குறவங்க வியாபாரிகளா, தரகர்களான்னு எப்பிடி தெரிஞ்சுப்பீங்க? வாங்குபவர்கள் தங்களுக்குள் பேசி price fixing செஞ்சுக்கிட்டா எப்பிடி கண்டுபிடிப்பீங்க? இந்த சந்தையில் ஏலத்தில் பங்கு பெற நீங்க கட்டணம் எதுவும் வசூல் பண்ணுறீங்களா? இ பரிவர்த்தனையில் பணப்பறிமாற்றத்திற்கு கமிஷன் எவ்வளவு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X