பொன்னேரி: நுாலகங்கள் திறக்கப்பட்டும், தினசரி நாளிதழ்கள் இல்லாததால், வாசகர்கள் நாட்டு நடப்புகளை விபரமாக அறிந்துக் கொள்ள முடியாமல் ஏங்கி கிடக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் பகுதிகளில், கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து, செப்., 1ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் நுாலகங்கள் செயல்படுகின்றன.நுாலகங்களில், வாசகர்கள் நேரிடையாக புத்தகங்கள் எடுக்க அனுமதியில்லை.தேவையான புத்தகங்களை நுாலகர் எடுத்துக் கொடுக்கிறார். இரவல் வழங்கும் நடைமுறை தொடர்கிறது.சமூக இடைவெளி, கிருமி நாசினி, முக கசவம் கட்டாயம் என, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆனால், நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் இல்லாததால், வாசகர்கள் வருகையில்லை.ஒவ்வொரு கிளை நுாலகங்களிலும், காலை, மாலை, என, 10க்கும் மேற்பட்ட நாளிதழ்கள், 15 வார இதழ்கள், 80 மாத இதழ்கள் இருந்ததால், வாசகர்கள் தினமும் வந்து அவற்றை படித்துவிட்டு செல்வர்.தற்போது நுாலகங்களில் அவை ஏதும் இல்லாததால், வாசகர்கள் ஏக்கத்துடன் இருக்கின்றனர். வயதானவர்கள் நுாலங்களுக்கு வந்து தினசரிகளை படித்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில், அவர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.கிளை நுாலகங்களில், நாளிதழ்கள் போட வேண்டும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் வாசகர்களை அனுமதிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நாளிதழ் படிப்பவர்கள் அதிகம்நான், தினமும் நுாலகம் வந்து தினசரிகளை படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். தற்போது, நாளிதழ்கள் இல்லாமல் புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு செல்கிறேன்.நுாலகங்களுக்கு வரும் வாசகர்களில், தினசரி மற்றும் வார இதழ்களை படிப்பவர்களே அதிகம். வாசகர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, தினசரி நாளிதழ்களை படித்துவிட்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.
வி. கேசவன்வாசகர், உப்பளம் கிராமம், பொன்னேரி
.நாளிதழ்கள் இல்லாததுவருத்தம்நாட்டின் பல்வேறு பகுதிகளில், நாள் முழுதும் நடைபெறும் நிகழ்வுகளை ஒரே நேரத்தில், நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. பல ஆண்டுகளாக, நுாலகம் வந்து நாளிதழ் படிப்பது வழக்கம். தற்போது அவை இல்லாததால் வருத்தமாக இருக்கிறது. நுாலகங்களில், நாளிதழ் வழங்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாசகர்கள் அவற்றை படிக்கவும், அனுமதிக்க வேண்டும்
.எம். மணி, வாசகர், பழவேற்காடு.