அரண்வாயல்குப்பம்: அரண்வாயல்குப்பம் பகுதியில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பின், வேகத்தடை அகற்றப்பட்டது.திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது, அரண்வாயல்குப்பம். இப்பகுதியில், சில தினங்களுக்கு முன், சீரமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது.இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் தொலைக்காட்சி ஊழியர், நெடுஞ்சாலை வேகத்தடையால் நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி பலியானார்.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர், அரண்வாயல்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையை அகற்றினர்.இதேபோல், இந்த நெடுஞ்சாலையில் வெள்ளவெடு, புதுச்சத்திரம், திருமழிசை உட்பட பல பகுதிகளில் உள்ள, 15க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.