கோவில் உண்டியலை  உடைத்து பணம் திருட்டு  | கடலூர் செய்திகள் | Dinamalar
கோவில் உண்டியலை  உடைத்து பணம் திருட்டு 
Added : அக் 24, 2020 | |
Advertisement
 

கடலுார : கடலுார், புதுப்பாளையத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், புதுப்பாளையத்தில் தரைகாத்த காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலை நேற்று முன்தினம் இரவு நாகராஜ் குருக்கள் பூஜை முடித்து விட்டு பூட்டிச் சென்றார். நேற்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்தார். அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த கோவில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.3,000 காணிக்கையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடலுாரில் பிரதான சாலையில் உள்ள இக்கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X