பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே எட்டு வெள்ளாடுகளைச் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.,
பெண்ணாடம் அடுத்த கோவிலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லவேல், 50; இவர் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் மேய்ச்சல் முடிந்து வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்தார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில் செல்லவேல் எழுந்து பார்த்த போது எட்டு ஆடுகளை காணவில்லை. இது குறித்து செல்லவேல் கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.