எட்டு வெள்ளாடுகள் திருட்டுபெண்ணாடம் அருகே துணிகரம் | கடலூர் செய்திகள் | Dinamalar
எட்டு வெள்ளாடுகள் திருட்டுபெண்ணாடம் அருகே துணிகரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:14

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே எட்டு வெள்ளாடுகளைச் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.,



பெண்ணாடம் அடுத்த கோவிலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்லவேல், 50; இவர் 20க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் மேய்ச்சல் முடிந்து வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்தார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில் செல்லவேல் எழுந்து பார்த்த போது எட்டு ஆடுகளை காணவில்லை. இது குறித்து செல்லவேல் கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X