மதம் மாற்ற முயற்சி பெண் ஏட்டு மீது புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:16

ஈரோடு:'மதம் மாற வற்புறுத்தும் பெண் ஏட்டு, அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.



ஈரோடு மாவட்டம், வேலம்பாளையத்தைச் சேர்ந்த சிவானந்தம், 32; விவசாயி. இவர், நேற்று ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:என் தந்தை, 2003ல் இறந்து விட்டார். என் தாய் சகுந்தலா, 57. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், கவுந்தப்பாடியை சேர்ந்த பிரபு என்பவர், என் தாயை மூளைச்சலவை செய்து, கிறிஸ்துவராக மாற்றி விட்டார்.



தாய் மதம் மாறியதால், எனக்கு உறவினர்கள், பெண் தர மறுக்கின்றனர். இந்நிலையில், பிரபு, கோபி மதுவிலக்கு பிரிவில், ஏட்டாக பணிபுரியும் அவரது மனைவி சுதா ஆகியோர், எங்கள் வீட்டிற்கு வந்து ஜெபம் செய்கின்றனர்.வீட்டின் அருகில் உள்ளவர்களையும், மதம் மாற சொல்கின்றனர். என்னையும், என் தாய் மூலமாக மதம் மாற வேண்டும் என, வற்புறுத்தி வருகின்றனர்.



இது குறித்து, கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தேன்.போலீசார், எதிர் தரப்பினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எனவே, மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும், தம்பதி மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X