கொரோனா தொற்றில் இருந்து 86.59 சதவீதம் பேர் மீண்டனர் | செய்திகள் | Dinamalar
கொரோனா தொற்றில் இருந்து 86.59 சதவீதம் பேர் மீண்டனர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
00:38

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் 86.59 சதவீதம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.



மாநிலத்தில் 3,784 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 95, காரைக்காலில் 18, மாகியில் 36, ஏனாமில் 9 என, மொத்தம் 158 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.அதேசமயம், புதுச்சேரியில் 162, காரைக்காலில் 32, மாகியில் 13, ஏனாமில் 9 என, மொத்தம் 216 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.



திருபுவனை மூகாம்பிகை நகரை சேர்ந்த 47 வயது பெண் கோவிட் மருத்துவமனையிலும், தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்த 72 வயது முதியவர் ஜிப்மர் மருத்துவமனையிலும் இறந்தனர். மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 986 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 427 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 584 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X