திருப்பூர்:திருப்பூரில், 43 ஆண்டு களாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் பெயர் பெற்றஎம்.ஜி.பி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 20 ஆண்டுகளாக, மொபைல் போன் விற்பனையில் சாதனை படைத்து வரும் சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனமும் இணைந்து,'எம்.ஜி.பி., சுப்ரீம்' என்ற பெயரில், நாளை புதிய ேஷாரூம் துவக்க உள்ளனர்.இது குறித்து, எம்.ஜி.பி., சுப்ரீம் இயக்குனர்கள் பாலன், ராதாகிருஷ்ணன், செல்வராஜ் கூறியதாவது:மாநகராட்சி அருகில், 'எம்.ஜி.பி., சுப்ரீம்' என்ற புதிய எலக்ட்ரானிக்ஸ் ேஷாரூமை துவக்குகிறோம். மாநகராட்சி அலுவலகம் அருகே, வளர்மதி எதிரே அமையும் புதிய ேஷாரூமை, நாளை இயக்குனர் பாலன், எல்.ஜி., வினியோகிஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த் திறந்து வைக்க உள்ளனர்.முதல் விற்பனையை, ஏ.எம்.சி., சூப்பர் ஸ்பேஷாலிட்டி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரபுசங்கர், இயக்குனர் ஜீவநந்தினி துவக்கி வைக்கின்றனர். 'டிவி' விற்பனையை, நவீன் பேஷன்ஸ் தங்கவேல், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையை மிதுன்ராம் டெக்ஸ் ராஜூ பழனிசாமி, மொபைல் விற்பனையை தம்புகார்ஸ் பாலசநந்தர் துவக்கி வைக்கின்றனர்.'டிவி', பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர்கள், பிராண்டட் லேப்டாப், முன்னணி பிராண்டட் மொபைல் போன், உதிரி பாகம் கிடைக்கும். திறப்பு விழா சலுகையாக, அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு. விவரங்களுக்கு, 73976 99555 என்ற எண்களில் அணுகலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.