திருப்பூர்:சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்துள்ளதால், கழிவு நீர் தேங்கி நின்று வருகிறது.திருப்பூர் - சூசையாபுரம், முதல் வீதியில் ரோட்டோரம் உள்ள சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து, சிலர் கட்டுமான பொருட்களை கொட்டி வைத்துள்ளனர். இதன் காரணமாக, துாய்மை பணியாளர்கள் கால்வாயை முறையாக துார்வராமல் சென்று வருகின்றனர்.மாதக்கணக்கில் துார் வாரப்படாமல் உள்ளதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி, கால்வாயை துார்வர வேண்டும்.