சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 'ரெய்டு': கணக்கில் வராத ரூ.91 ஆயிரம் சிக்கியது; 4 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
02:03

கோவை:சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 91 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில், நான்கு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.கோவை க.க.சாவடியில் வட்டார போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரளவுக்கு செல்லும் வாகனங்கள், அங்கிருந்து வரும் வாகனங்களின் ஆவணங்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.இச்சோதனை சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட, 10 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., கணேஷ், தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். சோதனை சாவடியின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்திய போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் உதவியாளரிடம் கணக்கில் வராத, 91 ஆயிரம் ரூபாய் இருப்பதை கண்டறிந்தனர்.மாலை, 3:00 மணி வரை சோதனை நடந்தது. மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, துணை ஆய்வாளர் அருள், உதவியாளர் கண்ணன் இவர்கள் பணியமர்த்திய சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.லஞ்சம் கொடுத்த டிரைவர்கள்க.க.சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனை சாவடி அலுவலர்கள் முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களின் டிரைவர்களிடம் இருந்து கணிசமான தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டு அவ்வாகனத்தை சோதனை செய்யாமல் அனுப்புவது வழக்கமாக இருந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அங்கு சோதனை நடத்தி கொண்டிருந்ததை அறியாத டிரைவர்கள் சிலர், வழக்கம் போல் சோதனை சாவடிக்கு வந்து அலுவலர்களுக்கு லஞ்சப்பணத்தை கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை பிடித்து, ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். இதனால், சோதனை சாவடிக்கு வந்த பல வாகனங்களின் டிரைவர்களும் தலைதெறிக்க ஓடினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-அக்-202015:19:07 IST Report Abuse
Ram Pollachi ஒரே ஒரு நாள் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ரெய்டு விட்டால் இதை விட அதிகம் தேரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X