காசோலை மோசடி வழக்கு: தலைமையாசிரியருக்கு சிறை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
காசோலை மோசடி வழக்கு: தலைமையாசிரியருக்கு சிறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 அக்
2020
09:40

ஓசூர்: காசோலை மோசடியில் ஈடுபட்ட, பள்ளி தலைமையாசிரியருக்கு, ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, ஓசூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓசூர், ரயில்வே ஸ்டேஷன் எதிரே வசித்து வருபவர் முனிராஜ், 45. தளி அடுத்த, வெங்கடாபுரம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்; இவர், 2016ல், நெசவாளர் தெருவை சேர்ந்த வங்கி தங்கநகை மதிப்பீட்டாளர் முரளி, 43, என்பவரிடம், ஐந்து லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருந்தார். அந்த பணத்திற்காக முனிராஜ் வழங்கிய, காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததால், ஓசூர் விரைவு நீதிமன்றத்தில், முரளி தரப்பில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி முனுசாமி விசாரித்து, காசோலை மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் முனிராஜிற்கு ஓராண்டு சிறை தண்டனை, ஐந்து லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X