கொரோனா தடுப்பூசி போட முன்னுரிமை: அனைத்து டாக்டர், நர்சுகள் விபரம் சேகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
09:45

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி செய்யும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.


கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரம், வருவாய், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி, போலீஸ் போன்ற துறையினரை முன்கள பணியாளர்கள் (பிரண்ட்லைன் ஒர்க்கர்ஸ்) என அழைக்கின்றனர். இவர்கள் கொரோனா பரவலால் இறந்தால், 50 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கும் வகையில் அரசு சார்பில் காப்பீடு செய்துள்ளனர். அதேநேரம், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர், தூய்மை பணியாளர்கள் போன்றோருக்கு காப்பீடு, சிறந்த மருத்துவ சிகிச்சை போன்ற வாய்ப்பு குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் இத்தடுப்பூசி அல்லது மருந்து, நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு வழங்கும் வகையில் அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர், செவிலியர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிலை பணியாளர்களை, கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கொரோனா தடுப்பு மருந்தை, முன் களப்பணியாளர்கள் என்ற ரீதியில், டாக்டர்கள், செவிலியர், தூய்மை பணியாளர்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள், பரிசோதனை கூட பணியாளர்களுக்கு, செலுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது. இதற்காக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள டாக்டர், செவிலியர் உள்ளிட்ட அனைத்து நிலை பணியாளர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது. தடுப்பு மருந்து வரும் பட்சத்தில், முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தும் பணி துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X